ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் நாளை நடை அடைப்பு

ராமேஸ்வரம்: ராமலிங்க பிரதிஷ்டை விழாவின் இரண்டாம் நாளான நாளை தனுஷ்கோடி செல்லும் வழியில் உள்ள கோதண்டராமர் கோயிலில் விபீஷணர் பட்டாபிஷேகம் வைபவம் நடைபெறுகிறது. அதனால் நாளை அதிகாலை 6 மணிக்குள் ஸ்படிகலிங்கபூஜை மற்றும் காலபூஜைகள் முடிந்து 7 மணிக்கு ராமர், சீதை, விபீஷணர் கோதண்டராமர் கோயில் எழுந்தருளுகின்றனர்.

அங்கு மதியம் ஒரு மணியளவில் பட்டாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி நாளை காலை 7 மணிக்கு ராமர் புறப்பாடானவுடன் ராமநாதசுவாமி கோயில் நடை அடைக்கப்படும். பகல் முழுவதும் அடைக்கப்பட்டு மீண்டும் மாலை 5 மணிக்கு மேல் கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமி, அம்பாள் சன்னதியில் வழக்கமான பூஜைகள் நடைபெறுகிறது.

Related posts

புதிய குற்றவியல் சட்டம்: திமுக உண்ணாவிரதம்

லாரி மீது மினி டெம்போ மோதி 2 பேர் பலி..!!

பிஎஸ்பி அலுவலகத்தில் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய வேண்டும்: செல்வப்பெருந்தகை கோரிக்கை