ராமேஸ்வரம் மீனவர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீன்களுக்கு போதிய விலை நிர்ணயம் செய்யக் கோரி மீனவர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மீனவர்களின் போராட்டம் காரணமாக துறைமுகத்தில் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மீனவர்களின் வேலைநிறுத்தத்தால் நாள் ஒன்றுக்கு ரூ.1 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மீன்பிடி தொழில் சார்ந்த 5,000 தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி வருவதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ஒன்றிய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து மீன்களுக்கு உரிய விலையை நிர்ணயம் செய்ய மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இறால், நண்டு, கணவாய் உள்ளிட்ட மீன்களுக்கு போதிய விலை கிடைக்காததால் தொடர்ந்து நஷ்டம் ஏற்படுவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

Related posts

குடித்துவிட்டு வந்ததை தாய் கண்டித்ததால் கழிவுநீர் தொட்டியில் குதித்து 16 வயது சிறுவன் தற்கொலை: 4 மணி நேர போராட்டத்துக்கு பின் சடலம் மீட்பு

மது போதையில் தகராறு சம்மட்டியால் மனைவி தாக்கியதில் கணவர் பலி

ஒன்றிய பாஜ அரசை கண்டித்து காங்கிரஸ் சார்பில் நடைபயணம்: பீட்டர் அல்போன்ஸ் பங்கேற்பு