ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேர் விடுதலை 3 பேருக்கு சிறை

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 4ம் தேதி 2 விசைப்படகுகளில் மீன் பிடித்த 23 மீனவர்களை கைது செய்த , இலங்கை கடற்படையினர் யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். விசாரணை கைதியாக இருந்த இவர்கள் நேற்று ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணை செய்த நீதிபதி கஜநிதிபாலன், 2 படகுகளின் ஓட்டுனர்களான ராபர்ட் (42), பெக்கர் (27) இருவருக்கும் தலா 6 மாதம் சிறை தண்டனை விதித்தார்.

தங்கச்சிமடம் மீனவர் மெல்சன் (23) இரண்டாம் முறையாக கடற்படையினரால் கைது செய்யப்பட்டதால் ஓராண்டு சிறை தண்டனை விதித்தார். மற்ற 20 மீனவர்களையும் 5 ஆண்டு ஒத்தி வைக்கப்பட்ட 18 மாத சிறை தண்டனையுடன் விடுதலை செய்து உத்தரவிட்டார். மீண்டும் இவர்கள் இரண்டாம் முறையாக கடற்படையினரால் கைது செய்யப்பட்டால் 18 மாத சிறை தண்டனை உறுதிப்படுத்தப்படும். மேலும் படகின் உரிமையாளர்கள் மே 6ம் தேதியன்று நீதிமன்றத்தில் ஆஜராகவும் உத்தரவிட்டார். 20 மீனவர்களும் ஒரு சில தினங்களில் தமிழகம் திரும்புவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு சிறுவன் மீது போக்சோ வழக்கு

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்