ராமேஸ்வரம் கோயிலில் 15 நாள் உண்டியல் வசூல் ரூ.1.14 கோடி

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை வசூல் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. கோயில் கிழக்கு திருக்கல்யாண மண்டபத்தில் துணை கமிஷனர் மாரியப்பன் முன்னிலையில் காணிக்கை எண்ணப்பட்டது. இதில் ரூ.1 கோடியே 14 லட்சத்து 55 ஆயிரத்து 825 ரொக்கம், தங்கம் 92 கிராம் 200 மி.கிராம், வெள்ளி 3 கிலோ 250 கிராம், வெளிநாட்டு பணம் 83 வசூலாகி இருந்தது. கடந்த 15 நாட்களில் மட்டும் பக்தர்களால் காணிக்கையாக ரூ.1.14 கோடி உண்டியலில் செலுத்தப்பட்டுள்ளது .

Related posts

திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கடும் வீழ்ச்சி

தொடர் மழையால் அடுத்தடுத்து உடையும் பாலங்கள்

நான் முதல்வன் திட்டத்தில் ஒன்றிய அரசு பணி தேர்வுக்கான பயிற்சி வழங்கும் நிறுவனங்களை தேர்வுசெய்ய டெண்டர்!