ராமர் இல்லாமல் பாரதத்தை நினைத்துப் பார்க்க முடியாது: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

சென்னை: ராமர் இல்லாமல் பாரதத்தை நினைத்துப் பார்க்க முடியாது என ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நாரத கான சபையில் நடைபெறும் ‘சென்னையில் அயோத்தி’ நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். அப்போது பேசிய அவர்; ராமராஜ்ஜியத்தின் அஸ்திவாரம் அமைத்த நாள் இன்று; சுதந்திர தினம் எவ்வளவு முக்கியமோ அது போன்ற நாள் இது. நாம் கனவு காண்ட ராமராஜ்யம் நிறுவப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நிறைய இடங்களில் ராமர் தொடர்பான கோயில்கள் அமைந்துள்ளன. ராமரை பற்றி கூறுவதற்கு தமிழ்நாட்டில் இடம் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தமிழ் கலாசாரமும் சனாதனமும் ஒன்றே. ராமர் இல்லாமல் பாரதத்தை நினைத்துப் பார்க்க முடியாது; ராமர், பாரத், தமிழகத்தை பிரிக்க முடியாது. தமிழ் இலக்கியங்களில் ராமர் குறித்து குறிப்பிட்டுள்ளனர். நாம் அனைவரும் ஒன்று என பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ரிஷிகள் மூலம் சனாதனம் தர்மத்தில் உள்ளது.

சுயநலம் காரணமாக மொழி, மதம் அடிப்படையில் சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்தி வருகின்றனர். உலக பிரச்னைகளுக்குத் தீர்வுகளை உலக நாடுகள் இந்தியாவிடம் எதிர்பார்க்கின்றன. இந்தியாவை உலகின் நெ.1 நாடாக மாற்ற அனைவரும் உழைக்க வேண்டும் இவ்வாறு கூறினார்.

Related posts

சித்தராமையா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு

குடியாத்தம் அருகே நள்ளிரவு ஒற்றை யானை அட்டகாசம் நெற்பயிர்கள் சேதம்: பொதுமக்கள் அச்சம்

சென்னை விமானநிலையத்தில் இன்று போதிய பயணிகள் இன்றி 2 விமானங்கள் ரத்து