ராமநாதபுரம் மாவட்டத்தில் தேவர் குருபூஜையையொட்டி 3 நாட்களுக்கு மதுபான கடைகளை மூட உத்தரவு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் தேவர் குருபூஜையை ஒட்டி அக். 28, 29, 30 ஆகிய நாட்களில் மதுபான கடைகளை மூட உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் பா.விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம் மற்றும் பசும்பொன் நகரில் எதிர்வரும் 30.10.2023 அன்று நடைபெறும் பசும்பொன் முத்துராமலிங்கதேவர் ஜெயந்தி விழா நிகழ்ச்சியினை முன்னிட்டு பொது அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கினைப் பாதுகாக்கும் பொருட்டு 28.10.2023, 29.10.2023 மற்றும் 30.10.2023 ஆகிய மூன்று தினங்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக்கூடங்கள், எப்.எல்.2. எப்.எல்.3 உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் ஆகியவற்றில் மதுபானங்களை விற்பனை செய்வதை நிறுத்தம் செய்யும் பொருட்டு அக்டோபர் 28.10.2023, 29.10.2023 மற்றும் 30.10.2023 ஆகிய மூன்று நாட்கள் முழுமையாக மூடி வைத்திட ஆணையிடப்படுகிறது. மேற்கண்ட நாளில் விதிமுறைகளை மீறி மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Related posts

மெத்தனால் பதுக்கிய பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்!

கள்ளச்சாராயம் விற்ற 5 பேர் மீது குண்டர் சட்டம்

டி20 உலக கோப்பை வென்று தாயகம் திரும்பிய இந்திய வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..!