ராமநாதபுரம் மாவட்டத்தில் எத்தனை ஏரிகள் உள்ளன?.. ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: ராமநாதபுரம் மாவட்டத்தில் எத்தனை ஏரிகள், கண்மாய்கள் உள்ளன? என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கண்மாய்களை தூர்வார தன்னார்வலர்களுக்கு அனுமதி வழங்கக் கோரி ராமநாதபுரத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். ஏரிகளின் பரப்பளவு, அதன் கொள்ளளவு எவ்வளவு என்றும் கடைசியாக எப்போது தூர்வாரப்பட்டது? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் வழக்கு தொடர்பாக ராமநாதபுரம் ஆட்சியர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Related posts

திருநெல்வேலியில் இருந்து இயக்கப்படும்; நெடுந்தூர சிறப்பு ரயில்கள் கன்னியாகுமரிக்கு வருமா?: பயணிகள் எதிர்பார்ப்பு

மெரினாவில் அக்.6 வரை டிரோன்கள் பறக்க தடை

சித்தராமையா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு