திருச்சி: ராமநாதபுரம் ஆட்சியரை கீழே தள்ளிய வழக்கில் கைதான நவாஸ்கனி எம்.பி.யின் உதவியாளருக்கு நிபந்தனை ஜாமின் கிடைத்துள்ளது. திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் தினசரி காலை கையெழுத்திட வேண்டும் என்று நவாஸ்கனி எம்.பி.யின் விஜயராமுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது. ராமநாதபுரத்தில் நடந்த அரசு விழாவில் ஆட்சியர் விஷ்ணுசந்திரனை நவாஸ்கனி உதவியாளர் விஜயராமு கீழே தள்ளிவிட்டதால் கைது செய்யப்பட்டார்.