ராமநாதபுரத்தில் மொத்தம் எத்தனை நீர்நிலைகள் உள்ளன? எத்தனை தூர்வாரப்பட்டுள்ளன? : ஆட்சியர் பதிலளிக்க ஆணை!!

மதுரை : ராமநாதபுரம் மாவட்டத்தில் எத்தனை ஏரிகள், கண்மாய்கள் உள்ளன? என உயர்நீதிமன்ற மதுரை கிளை எழுப்பியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நீர்வரத்து கால்வாய்களை தூர்வார அனுமதி வழங்க கோரி தன்னார்வலர்கள் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில்,”ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர், சாயல்குடி, கமுதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை. முட்புதர்கள் மண்டி நீர் செல்ல முடியாத நிலை, விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது. விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டால், பல்வேறு மாவட்டங்களுக்கு வேலை தேடி செல்ல வேண்டிய சூழல் ஏற்படும்.

ஆதலால் சீமை கருவேல மரங்களை அகற்றி கால்வாய் தூர்வார எங்களது தொண்டு நிறுவனத்திற்கு அனுமதி கோரி விண்ணப்பித்தோம். ஆனால் கால்வாயைத் தூர்வார மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தொண்டு செய்ய வருகிறார்கள்; ஆனால் அவர்களுக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பை தரவில்லை. எனவே நீர்வரத்து கால்வாய்களைத் தூர்வார தங்கள் தொண்டு நிறுவனத்துக்கு அனுமதி வழங்க மாவட்ட நிர்வாகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும், “இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணையில் உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள்,”ராமநாதபுரம் மாவட்டத்தில் எத்தனை ஏரிகள், கண்மாய்கள் உள்ளன?ஏரிகளின் பரப்பளவு, அதன் கொள்ளளவு எவ்வளவு?. கடைசியாக எப்போது தூர்வாரப்பட்டது?.தூர்வாரப்பட்ட விவரங்களை ராமநாதபுரம் ஆட்சியர் தாக்கல் செய்ய வேண்டும். அறிக்கை தாக்கலுக்கு பின் தூர்வாரப்பட்ட இடங்களை சென்னை ஐஐடி நிபுணர் குழு, பாதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய நேரிடும்,”இவ்வாறு தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தனர்.

Related posts

குடியாத்தம் அருகே நள்ளிரவு ஒற்றை யானை அட்டகாசம் நெற்பயிர்கள் சேதம்: பொதுமக்கள் அச்சம்

சென்னை விமானநிலையத்தில் இன்று போதிய பயணிகள் இன்றி 2 விமானங்கள் ரத்து

தேனியில் இளைஞர் கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு