மாநிலங்களவையில் காலி இடங்கள் 16 ஆக அதிகரிப்பு

புதுடெல்லி: கடந்த 2020ம் ஆண்டு தெலங்கானாவில் இருந்து பிஆர்எஸ் கட்சி சார்பில் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் கேசவராவ். சமீபத்தில் பிஆர்எஸ் கட்சியில் இருந்து கேசவராவ் விலகினார். கடந்த 3ம் தேதி காங்கிரசில் அவர் சேர்ந்தார். பிஆர்எஸ் கட்சியை விட்டு விலகிய கேசவராவ் நேற்றுமுன்தினம் எம்பி பதவியை ராஜினாமா செய்தார். அவருடைய ராஜினாமாவை மாநிலங்களவை துணை தலைவர் ஜெகதீப் தன்கர் ஏற்று கொண்டார் என அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்தன. கேசவராவின் ராஜினாமாவால் மாநிலங்களவையில் காலியாக உள்ள எம்பிக்களின் இடங்கள் 16 ஆக உயர்ந்துள்ளது.

Related posts

குடித்துவிட்டு வந்ததை தாய் கண்டித்ததால் கழிவுநீர் தொட்டியில் குதித்து 16 வயது சிறுவன் தற்கொலை: 4 மணி நேர போராட்டத்துக்கு பின் சடலம் மீட்பு

மது போதையில் தகராறு சம்மட்டியால் மனைவி தாக்கியதில் கணவர் பலி

ஒன்றிய பாஜ அரசை கண்டித்து காங்கிரஸ் சார்பில் நடைபயணம்: பீட்டர் அல்போன்ஸ் பங்கேற்பு