மாநிலங்களவை அவை முன்னவராக ஜே.பி. நட்டா நியமனம்

புதுடெல்லி: பா.ஜ தலைவராகவும், ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சராகவும் இருப்பவர் ஜேபி. நட்டா. நேற்று இவர் பா.ஜ சார்பில் மாநிலங்களவை அவை முன்னவராக நியமிக்கப்பட்டார். இதற்கு முன்பு இந்த பொறுப்பில் ஒன்றிய அமைச்சர் பியூஷ்கோயல் இருந்தார். தற்போது தேர்தலில் வென்று அவர் மக்களவைக்கு சென்றுவிட்டதால் அவருக்கு பதில் ஜேபி நட்டா நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவராக உள்ளார். நட்டா நியமனத்திற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில்,’ மாநிலங்களவை அவை முன்னவராக நியமிக்கப்பட்டுள்ள ஜே.பி. நட்டாவுக்கு வாழ்த்துக்கள். வெங்கையா நாயுடு சொன்னது போல் அவை முன்னவர் இடமளித்தால், எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்கலாம்’ என்று பதிவிட்டுள்ளார்.

Related posts

உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 122 உயிரிழப்பு: தலைவர்கள் இரங்கல்

அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பவானிசாகர் அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்வு