மாநிலங்களவை சீட் வேண்டும் என்பதில் தேமுதிக உறுதியாக உள்ளது : பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திட்டவட்டம்

சென்னை : லோக்சபா தேர்தலில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக அதிமுக – தேமுதிக இடையே 2 கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்து கூட்டணி உறுதியாகியுள்ளது. 4 தொகுதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், எந்தெந்த தொகுதிகள் என்பது பற்றிய பேச்சு நடந்து வருவதாகவும் தேமுதிக அவைத்தலைவர் இளங்கோவன் அண்மையில் தெரிவித்தார். இருப்பினும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை தேமுதிகவுக்கு வழங்க அதிமுக மறுத்து வருவதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “அதிமுக தலைமை அலுவலகம் சென்று முதல்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறோம்.

அதிமுக அலுவலகத்துக்கு எங்களது பேச்சுவார்த்தை குழுவினர் மரியாதை நிமித்தமாகவே சென்றுவந்தார்கள். அதிமுகவிடம் மாநிலங்களவை சீட் கேட்டுள்ளோம். தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடரும். பாஜகவுடன் திரை மறைவு பேச்சுவார்த்தை என ஒன்றுமில்லை. அதிமுக, பா.ஜ.க. இரு கட்சிகளும் கூட்டணிக்கு அழைப்பு விடுத்திருந்தன. மாநிலங்களவை சீட் தர அதிமுக மறுத்ததாக வெளியான தகவல் உறுதிப்படுத்தப்படாதது. அனைத்து கட்சிகளுக்கும் மாநிலங்களவை உறுப்பினர்கள் இருப்பதால் எங்கள் கட்சிக்கும் கேட்கிறோம். மாநிலங்களவை சீட் வேண்டும் என்பதில் தேமுதிக உறுதியாக உள்ளது. எங்கள் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளோம். வெகு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்,”இவ்வாறு தெரிவித்தனர்.

Related posts

வினாத்தாள் கசிவு: ம.பி.யில் 10 ஆண்டு சிறை

கென்யாவில் அரசுக்கு எதிராக போராட்டம்: 39 பேர் பலி

நாமக்கல் முட்டை விலை ரூ.5.15 ஆக நீடிப்பு