ரஜினிகாந்த் நடித்துள்ள ‘வேட்டையன்’ திரைப்படத்துக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படத்துக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. வேட்டையன் திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி ஐகோர்ட் மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. வேட்டையன் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள என்கவுன்ட்டர் தொடர்பான வசனங்களை நீக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ‘வேட்டையன்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது. ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் இத்திரைப்படம் வரும் 10ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் இந்த திரைப்படத்துக்கு தடி விதிக்க வேண்டும் என்று மதுரையை சேர்ந்த பழனிவேல் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அதில் ‘வேட்டையன்’ திரைப்படத்தில் சட்ட விரோதமாக என்கவுன்டர் செய்வதை ஊக்குவிக்கும் விதமாக உள்ளது. சட்ட விரோத என்கவுன்டரை பொதுமக்கள் ஏற்கும் மனப்போக்கின் வகையில் காட்சிகளும், வசனங்களும் இடம் பெற்றுள்ளது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே இந்த வசனங்களை நீக்க வேண்டும் அல்லது வசனங்கள் வரும்போது மியூட் செய்ய வேண்டும், அதுவரையில் வேட்டையன்’ திரைப்படத்தை இடைக்கால தடை விதிக்க வேண்டும் என மனுதாக்கல் செய்திருந்தார். இ

ந்த மனு நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் மனுதாரரின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள் இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்து, லைகா நிறுவனம் மற்றும் சென்சார் போர்டு விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளனர்.

Related posts

தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

மனித உயிரோடு விளையாட வேண்டாம்; சேதமடைந்த ஆனந்தூர் நூலகத்தை உடனடியாக மூட வேண்டும் : உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

பொன் மாணிக்கவேல் கோரிக்கை நிராகரிப்பு