ரஜினிகாந்தின் கூலி திரைப்பட பர்ஸ்ட் லுக் வடிவத்தை களிமண்ணால் உருவாக்கிய திருப்பூரைச் சேர்ந்த மண்பாண்ட கலைஞர்

திருப்பூர்: திருப்பூரைச் சேர்ந்த மண்பாண்ட கலைஞர் நடிகர் ரஜினிகாந்தின் கூலி திரைப்பட பர்ஸ்ட் லுக் வடிவத்தை களிமண்ணால் உருவாக்கி உள்ளார். தமிழ் திரை உலகின் உச்ச நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். பல்வேறு படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தின் சூப்பர் ஸ்டாராக வழங்கி வருகிறார்.

இவரது படங்கள் வெளிவரும் பொழுதும் அந்தப் படத்தின் பாடல் போஸ்டர் வெளியிடப்படும் பொழுதும் அதிகளவிலான பார்வையாளர்களை பெறுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. அதன்படி இறுதியாக நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது.

இதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தற்போது மோஸ்ட் வான்டெட் இயக்குனராக இருந்து வரும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிதாக கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் தோற்றம் பலரையும் வெகுவாக கவர்ந்தது.

இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் உடுமலை சேர்ந்த ரஜினி ரசிகரான மண்பாண்ட கலைஞர் ரஞ்சித் என்பவர் களிமண்மூலம் நடிகர் ரஜினிகாந்தின் கூலி திரைப்பட பர்ஸ்ட் லுக் தோற்றத்தை களிமண்ணால் உருவாக்கி உள்ளார்.

Related posts

தூத்துக்குடி மாவட்டம் குறிப்பன்குளத்தில் பட்டாசு கிடங்கில் வெடிவிபத்து: இருவர் உயிரிழப்பு

ஃபார்முலா 4 கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

அரியானா சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் தேதி அக்.1-ல் இருந்து அக்.5-க்கு மாற்றம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு