ராஜஸ்தான் முதல்வர் கெலாட் வேட்பு மனு தாக்கல்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். ராஜஸ்தானில் மொத்தமுள்ள 200 தொகுதிகளுக்கு வருகிற 25ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் முதல்வர் அசோக் கெலாட் நேற்று சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்தார். சர்தார்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுவதற்காக மனுதாக்கல் செய்துள்ளார். கடந்த 1998 ம் ஆண்டு முதல் அனைத்து சட்டமன்ற தேர்தலிலும் சர்தார்பூர் தொகுதியில் அசோக் கெலாட் வெற்றி பெற்றுள்ளார். 2018ம் ஆண்டு நடந்த தேர்தலில் 63 சதவீத வாக்குகளை அவர் பெற்று இருந்தார்.

Related posts

ஆந்திராவில் இருந்து தேனிக்கு கடத்தி வரப்பட்ட 22 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல்!

கடலூர் ஆலை காலனி பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை!

தமிழ்நாட்டில் 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!