ராஜஸ்தான் முதல்வர் கார் முற்றுகை

புதுடெல்லி: டெல்லியில் லுத்தியன்ஸ் பகுதியில் அமைந்துள்ள ஜோத்பூர் இல்லத்தின் வெளியே ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் காரை காங்கிரஸ் கட்சியினர் நேற்று முற்றுகையிட்டு கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ராஜஸ்தானில் 200 தொகுதிகளுக்கான தேர்தல் நவம்பர் 25ம் தேதி நடக்க உள்ள நிலையில், வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் சீட் கிடைக்காத அதிருப்தியில் சிலர் முதல்வர் கெலாட் காரை வழிமறித்துள்ளனர். இது குறித்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கூறுகையில், ‘‘போராட்டம் எதுவும் நடக்கவில்லை. சிலர் தேர்தலில் சீட் கேட்டு முதல்வரின் காரை வழிமறித்தனர். உடனடியாக அவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்’’ என்றனர்.

Related posts

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்