ராஜஸ்தானில் சரக்கு ரயில் தடம் புரண்டது

ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூர் அருகே சரக்கு ரயிலின் இரண்டு வேகன்கள் தடம் புரண்டதால், ஏழு ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – மதார் ரயில்வே பிரிவின் அசல்பூர் ஜாப்னர் மற்றும் ஹிர்னோடா ரயில் நிலையங்கள் இடையே சென்ற சரக்கு ரயில், நேற்று அதிகாலை தடம் புரண்டது. அதனால் சரக்கு ரயிலின் இரண்டு வேகன்கள் தண்டவாளத்தை விட்டு விலகியது. தகவலறிந்த ரயில்வே மீட்புப் பணியாளர்கள் தடம் புரண்ட சரக்கு ரயிலின் தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் இப்பாதை வழியாக செல்லும், 7 ரயில்கள் ரத்து செய்யப்பட்டது.

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்