ராஜஸ்தானில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 பேர் கைது: ரூ.15 லட்சம் லஞ்சம் பெற்றபோது கையும் களவுமாக சிக்கினர்..!!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஏலச்சீட்டு மோசடி வழக்கில் கைது செய்யாமல் இருக்க ரூ.17 லட்சம் லஞ்சம் கேட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 பேரை ராஜஸ்தான் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. ஏலச்சீட்டு மோசடி வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யாமல் இருக்க லஞ்சம் கேட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. ரூ.17 லட்சம் லஞ்சம் கேட்டு ரூ.15 லட்சத்தை வாங்கியபோது 2 அதிகாரிகளை ராஜஸ்தான் லஞ்ச ஒழிப்பு போலீஸ் கைது செய்தது.

ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் 25ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. ராஜஸ்தான் தேர்தல் நெருங்கும் நிலையில் அடுத்தடுத்து அமலாக்கத்துறை சோதனைகள் நடைபெற்று வந்தன. கடந்த 30-ம் தேதி 30 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில், இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

Related posts

பாமக நிர்வாகி ராமலிங்கம் கொலை வழக்கு; தமிழகம் முழுவதும் 25 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை: பென்டிரைவ், செல்போன்கள் உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல்

போலி பேராசிரியர்கள் விவகாரம்; நிரந்தர தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்: அண்ணா பல்கலை. துணைவேந்தர் வேல்ராஜ் பேட்டி

கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு ஆய்வு: விரைந்து முடிக்க உத்தரவு