ராஜஸ்தானில் இன்னொரு யோகி

ராஜஸ்தானில் திஜாரா சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ சார்பில் நிறுத்தப்பட்ட பாபா பாலக்நாத் 6173 ஓட்டுகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் இம்ரான்கானை வீழ்த்தியுள்ளார். உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் போல் இவர் ராஜஸ்தானின் யோகி என்று அழைக்கப்படுகிறார். தற்போது அல்வார் தொகுதி பா.ஜ எம்.பி.யாக உள்ள பாபா பாலக்நாத் அங்கு முதல்வர் வேட்பாளருக்கான போட்டியில் உள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது,’எங்கள் பிரதமர் பாஜவின் முகமாக இருக்கிறார். முதல்வர் யார் என்பது குறித்தும் கட்சியே முடிவு செய்யும். எம்.பி.யாக நான் மகிழ்ச்சியடைகிறேன், சமுதாயத்திற்கு சேவை செய்ய விரும்புகிறேன். அதில் எனக்கு மிகவும் திருப்தி’ என்றார்.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது