ராஜஸ்தான் அமைச்சர்கள் 17 பேர் தேர்தலில் தோல்வி

ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் இடம் பெற்ற அமைச்சர்கள் பலர் படுதோல்வி அடைந்தனர். மேலும் அவரது ஆலோசகர்கள் 6 பேரில் 5 பேர் பின்தங்கினர். அசோக் கெலாட் அரசில் பேரிடர் மேலாண்மை அமைச்சர் கோவிந்த் ராம் மேக்வால் கஜுவாலா தொகுதியில் பாஜவின் விஸ்வநாத் மேக்வாலிடம் தோல்வி அடைந்தார்.

கோலாயத் தொகுதியில் இருந்து அமைச்சர் பன்வர் சிங் பதி தோல்வி அடைந்தார். மேலும் அமைச்சர்கள் சகுந்தலா ராவத் (பன்சூர்), விஸ்வேந்திர சிங் (தீக் கும்ஹர்), ரமேஷ் சந்த் மீனா (சபோதரா), ஷேல் முகமது (போகரன்), உதய்லால் அஞ்சனா (நிம்பஹேரா), பி.டி.கல்லா (பிகானர் மேற்கு), ஜாஹிதா கான் (கமான்), பஜன் லால் ஜாதவ் (வீர்), மம்தா பூபேஷ் (சிக்ராய்), பர்சாதி லால் மீனா (லால்சோட்), சுக்ராம் விஷ்னோய் (சஞ்சூர்), ராம்லால் ஜாட் (மண்டல்) , பிரமோத் ஜெயின் பயா (அன்டா) உள்பட 17 அமைச்சர்கள் தேர்தலில் பின்தங்கினர். முதல்வர் கெலாட்டின் ஆறு ஆலோசகர்களில் சன்யம் லோதா (சிரோஹி), ராஜ்குமார் ஷர்மா (நவல்கர்), பாபு லால் நகர் (டுடு), டேனிஷ் அப்ரார் மற்றும் முன்னாள் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் ஆர்யா ஆகியோரும் பின்தங்கியுள்ளனர்.

அதே சமயம் முதல்வர் கெலாட் (சர்தார்புரா), அமைச்சர்கள் அசோக் சந்த்னா (ஹிந்தோலி), சாந்தி தரிவால் (கோட்டா வடக்கு), பிரஜேந்திர ஓலா (ஜுன்ஜுனு), சுபாஷ் கர்க் (பரத்பூர்), முராரி லால் மீனா (தௌசா), அர்ஜுன் சிங் பமானியா (பன்ஸ்வாரா), மகேந்திர ஜீத் சிங் மால்வியாபாகிடோரா) ஆகியோர் முன்னிலையில் இருந்தனர்.

Related posts

மகளிர் மல்யுத்தம் வினேஷ் சாதனை: பதக்கம் உறுதி

ஆன்லைன் டிரேடிங் என்ற பெயரில் ரூ.1.20 கோடி மோசடி செய்த வாலிபர் கைது

நிதி நிறுவனத்தில் ரூ.4.38 லட்சம் மோசடி: கிளை மேலாளர் மீது வழக்கு