ராஜஸ்தானில் தீவிரமடையும் பாஜக உள்கட்சி மோதல்: வேட்பாளர் பட்டியலில் வசுந்தரா ராஜே ஆதரவாளர்களுக்கு போட்டியிட வாய்ப்பு மறுப்பு..!!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலுக்காக வெளியிடப்பட்டுள்ள முதல்கட்ட பாஜக வேட்பாளர் பட்டியலில் முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜேவின் ஆதரவாளர்களின் பெயர்கள் இடம் பெறாதது அக்கட்சி தலைவர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. 41 பேர் கொண்ட இந்த பட்டியலில் முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜேவின் ஆதரவாளர்கள் யாருடைய பெயரும் இடம் பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக ராஜஸ்தான் மாநில முன்னாள் அமைச்சர் வசுந்தரா ராஜேவை சந்தித்து பேசினார். அப்போது தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிப்பதாக கட்சி தலைமை உறுதி அளித்ததன் பேரில் பரப்புரையை தொடங்கிவிட்ட நிலையில் வாய்ப்பு மறுக்கப்பட்டது குறித்து அதிருப்தி தெரிவித்தார். இந்நிலையில் அதிருப்தியாளர்களை சமாளிப்பதற்காக பாஜகவின் கட்டுப்பாட்டு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related posts

கடலூர் ஆலை காலனி பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை!

தமிழ்நாட்டில் 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்