ராஜாஜி தெருச்சாலை சந்திப்பில் விழுந்து கிடக்கும் மரக்கிளையை அகற்ற வேண்டும்

 

கரூர், மே 1: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராஜாஜி தெருச்சாலை சந்திப்பில் விழுந்து கிடக்கும் மரக்கிளையை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராஜாஜி தெருச் சாலை சந்திப்பு பகுதியில் சாலையோரம் இருந்த மரத்தின் ஒரு பகுதி சரிந்து சாலையோரம் விழுந்தது. இந்த சாலையின் வழியாக அதிகளவு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. மரம் முறிந்து விழுந்ததால் இந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. அனைத்து வாகனங்களும் வேறு வழியில் சென்றன. இனி வரும் காலங்களில் காற்றுடன் கூடிய மழை அவ்வப்போது பெய்யும் என்பதால் இதுபோல மரம் முறிந்து விழும் முன்னரே கண்காணித்து அதனை அகற்ற வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாநகர பகுதிகளில் விழும் நிலையில் உள்ள மரங்களை கண்காணித்து விழாத வகையில் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை