நாடாளுமன்றத்தில் மணிப்பூர் பிரச்னை குறித்து குரல் எழுப்புவோம்: காங்கிரஸ் எச்சரிக்கை

புதுடெல்லி: காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயராம் ரமேஷ் நேற்று கூறியதாவது: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் முதலில் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று குரல் எழுப்புவோம்.
இரண்டாவதாக, ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள் மீது ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்களைக் கொண்டு மோடி அரசால் தொடுக்கப்படும் தாக்குதல்கள் குறித்து கேள்வி எழுப்புவோம்.

ஒன்றிய விசாரணை அமைப்புகளைக் கொண்டு தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் அமைச்சர்களின் வீடுகளில் ஒன்றிய விசாரணை அமைப்புகள் சோதனை நடத்துவது குறித்தும் நிச்சயம் கேள்வி எழுப்புவோம். மூன்றாவதாக, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை, சிறு குறு தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்புவோம். டெல்லி அவசர சட்டத்தை கண்டிப்பாக எதிர்ப்போம்,’’ என்று தெரிவித்தார்.

Related posts

வடகிழக்கு பருவமழையை முன்னெச்சரிக்கை: ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

தொடர் விபத்துக்கு பாதுகாப்பு வசதி, கண்காணிப்பு இல்லாததே காரணம்: மதுரைக் கிளை நீதிபதிகள் வேதனை

திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை அக்டோபர் 2ஆம் தேதி போக்குவரத்து மாற்றம்