மணிப்பூர் பிரச்னையை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்: ராகுல் காந்தி உறுதி

புதுடெல்லி: காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகள் மணிப்பூர் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் வலுவாக எழுப்பும் என்று ராகுல் காந்தி கூறினார். மணிப்பூரில் கடந்த ஆண்டு மெய்டீ மற்றும் குக்கி ஆகிய பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்ததில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மக்களவை தேர்தலில் மணிப்பூரில் உள்ள 2 தொகுதிகளையும் காங்கிரஸ் வென்றது.மக்களவையில் 2வது பெரிய கட்சியான காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர், ராகுல் காந்தி எதிர்க்கட்சி தலைவராகி உள்ளார்.

எதிர்க்கட்சி தலைவரான பின்பு கடந்த 8ம் தேதி ராகுல் காந்தி மணிப்பூருக்கு காந்தி சென்றார். அங்கு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து பேசி ஆறுதல் கூறினார். இந்நிலையில், ராகுல் காந்தி நேற்று டிவிட்டரில் பதிவிடுகையில்,மணிப்பூரில் வன்முறை ஏற்பட்ட பின்னர் 3 முறை அங்கு சென்றுள்ளேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக மாநிலத்தில் உள்ள நிலைமையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இப்போதும் கூட மாநிலம் இரண்டு பிரிவுகளாக உள்ளது. வீடுகள் தீ வைக்கப்பட்டுள்ளன. அப்பாவி மக்களின் உயிர்கள் ஆபத்தில் உள்ளன. ஆயிரக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியும் இந்தியா கூட்டணி கட்சிகளும் மணிப்பூர் பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தில் வலுவாக எழுப்பும் என குறிப்பிட்டுள்ளார். வீடியோ ஒன்றையும் ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார். அதில்,நிவாரண முகாம்களில் தங்கி உள்ளவர்களிடம் ராகுல் கலந்துரையாடுகிறார். அங்கு உள்ள மக்கள் தங்கள் பிரச்னைகளை ராகுலிடம் தெரிவிக்கின்றனர். தங்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என அவரிடம் கோரிக்கை விடுக்கின்றனர். அதற்கு ராகுல் காந்தி, ஒன்றிய அரசுக்கு அழுத்தம் தரும் வகையில் வரும் நாடாளுமன்ற கூட்டத்தில் மணிப்பூர் பிரச்னையை எழுப்புவோம் என்று அவர் கூறுகிறார்.

Related posts

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சூழல் சரியில்லாததால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய அனைவரும் நேரடியாக வர வேண்டாம்: கேரள முதல்வர் பேட்டி

ராமேஸ்வரம் மீனவர் உயிரிழப்பு: இலங்கை அரசுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம்