மழை காலங்களில் மின் கம்பிகள் அறுந்து கீழே கிடந்தால் தகவல் தெரிவிக்கலாம்: மின்வாரிய பொறியாளர்

 

தஞ்சாவூர்,நவ.11: மழை காலங்களில் மின் கம்பிகள் அறுந்து கீழே கிடந்தால் தகவல் தெரிவிக்கலாம் என்று மின்வாரிய பொறியாளர் தெரிவித்துள்ளார்.மழை காலங்களில் பொதுமக்கள் மின் விபத்தினை தவிர்த்திட மேற்கொவேண்டிய முன்னெச்சரிக்கை குறித்து மேற்பார்வை பொறியாளர் நளினி தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ஒரு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் அறுவடை முடியும் நேரத்தில் வயல் வெளிகளில் உள்ள தாழ்வழுத்த மின் பாதைகளின் குறைபாடுகள் சரிசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. எனவே, தஞ்சாவூர் மின்பகிர்மான வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மின்கம்பங்கள் சேதமடைந்து இருந்தால் அல்லது மின்கம்பிகள் தாழ்வாக இருந்தால் 9498486899 என்ற whatsapp கைபேசி எண்ணிற்கு புகைப்படத்துடன் இடத்தை குறிப்பிட்டு தகவல் தெரிவிக்கலாம். மேலும், மழை மற்றும் காற்றின் காரணமாக மின்கம்பிகள் அறுந்து கீழே விழுந்து கிடந்தாலும், மின்கம்பங்கள் உடைந்து கீழே விழுந்து இருந்தாலும் உடனடியாக 9498486899 என்ற மேற்படி எண்ணிற்கு இடத்தை தெளிவாக குறிப்பிட்டு தகவல் தெரிவிக்கலாம்.

 

Related posts

சேலத்தில் 59.1 மி.மீ. மழை

டூவீலர் எரிந்து நாசம்

கோவை- லோக்மான்யதிலக் ரயில் 4 மணி நேரம் தாமதம்