75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை இமாச்சலுக்கு ₹8,000 கோடி இழப்பு

சிம்லா: இமாச்சல் பிரதேச மாநிலத்தில் கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான மழை மற்றும் வெள்ளப் ெபருக்கு ஏற்பட்டது. அந்த மாநிலம் மிகப் பெரிய பேரிடரை சந்தித்த நிலையில், இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு மழையினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு நடத்தினார். பின்னர் அவர் கூறுகையில், ‘மழை, வெள்ளத்தால் ரூ.8,000 கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஒன்றிய அரசிடம் இருந்து உடனடி நிதியுதவி வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். ஒன்றிய அரசின் குழுவும், மாநில மழை சேதத்தை பார்வையிட்டுள்ளது. 2022-23ம் ஆண்டு பேரிடர் நிதியில் இருந்து, நிலுவையில் உள்ள 315 கோடி ரூபாயை விடுவிக்க ஒன்றிய அரசிடம் கோரியுள்ளோம். வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சாலைகள், மின்சாரம், குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டதால், அதனை சீரமைக்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன’ என்றார்.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி