தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்கைளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், தருமபுரி, நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், மதுரை, திருச்சி, தஞ்சை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சேலம், நாமக்கல், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரிவாளால் வெட்டி படுகொலை!

உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது