எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்புள்ளது?: தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தகவல்

சென்னை: சென்னையில் மிக கனமழைக்கான வாய்ப்பு இல்லை என தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார். தெற்கு சென்னையின் புறநகர் பகுதிகள், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கடலூர், கள்ளக்குறிச்சியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என அவர் தெரிவித்துள்ளார்.

கனமழை குறித்து மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது;

▪️ இதுவரை மிதமான மழைதான் பெய்து வந்தது. தற்போதுதான் மழை மேகங்கள் சென்னையை நோக்கி நகர்ந்து வருகின்றன. அடுத்த சில மணி நேரங்களில் கனமழை பெய்யக்கூடும்.

▪️ நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

▪️ சென்னையில் இதுவரை 50 முதல் 70 மில்லி மீட்டர் வரை மழை பதிவாகியுள்ளது.

▪️ தென் சென்னையின் சில பகுதிகளில் அடுத்த சில மணி நேரங்களில் மிக கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது.

▪️ சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் மிக மிக கனமழைக்கான வாய்ப்புகள் இல்லை.

▪️ விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடர்ந்த மேகங்கள் இருப்பதால், அடுத்த சில மணி நேரங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

Related posts

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை