சென்னையில் 30ல் 26 பகுதிகளில் அபாயகரமான நிலைக்குச் சென்ற நிலத்தடி நீர்: மீண்டும் தீவிரப்படுத்தப்படுமா மழைநீர் சேமிப்பு திட்டம்?

சென்னை : தமிழ்நாட்டில் நகரமயமாதல் அதிகரிப்பால் நிலத்தடி நீரை முற்றிலும் உறிஞ்சு எடுக்கும் நிலை உள்ளது. இது தொடர்பாக 37 மாவட்டங்களில் உள்ள 1166 வருவாய் குறு வட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் 360 வருவாய் குறு வட்டங்களில் நிலத்தடி நீர் மிகவும் அபாயகரமான அளவில் உறிஞ்சு எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சென்னையில் 30 வருவாய் குறு வட்டங்களில் 26 பகுதிகளில் மிகவும் மோசமான அளவில் நிலத்தடி நீர் உறிஞ்சு எடுக்கப்பட்டுள்ளதால் அரசு விழித்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. வெள்ளம், அதைத் தொடர்ந்து ஏற்படும் வறட்சி காலங்களில் மட்டும் மழைநீர் சேமிப்பு குறித்து பேசப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் தற்போது மழைநீர் சேமிப்பு என்பது ஏட்டளவில் மட்டுமே உள்ளதாக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

வீடு கட்டும் போதே தரை தளத்தில் தொட்டி ஒன்று அமைப்பதுடன் கிணறு, உரை கிணறுகளையும் அமைத்து சில ஆயிரங்கள் செலவிலேயே மழைநீர் சேமிப்பு கட்டமைப்பை உருவாக்க முடியும் என அதனால் பயன் பெறுபவர்கள் கூறுகின்றனர். வருங்காலங்களில் கட்டப்படும் அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்கிறார் மழை மனிதன் என அழைக்கப்படும் சமூக ஆர்வலர் சேகர் ராகவன். மழை பெய்யும் போதே அதனை சேமிக்கும் வழக்கத்தை ஏற்படுத்துவதுடன் அரசு உரிய முறையில் அதனை கண்காணிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.

Related posts

அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனை ரத்து

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னையில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

பிளஸ் 2 மாணவர்கள் திருமண வீடியோ விவகாரம் : 4 மாணவர்கள் சஸ்பெண்ட்