தமிழகத்தில் 23ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, வருகிற 23ம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, வருகிற 23ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பொருத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் முதல் 34 டிகிரி செல்சியஸ் ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் முதல் 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும். கடலோரப் பகுதிகளில் சூறவளிக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Related posts

22 ஆண்டுகளுக்குப் பின் செப்டம்பர் மாதத்தில் சென்னையில் அதிகபட்ச வெயில் பதிவு: தனியார் வானிலை ஆய்வாளர் பேட்டி

பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் குபேர ஹோமம்

மருத்துவர் சுப்பையா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு