தமிழ்நாட்டில் அடுத்த 5 நாள் மழை பெய்யும்

சென்னை: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் இயக்குநர் செந்தாமரைகண்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை முதல் அக்.7ம் தேதிவரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Related posts

கூட்டுறவுகள் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குகின்றன என்ற கருத்தில் சர்வதேச கூட்டுறவு தினம் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு: அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

விலங்குகள் மூலம் பரவும் நோய்கள் குறித்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: பொது சுகாதாரதுறை உத்தரவு

தமிழ்நாடு ப்ரீமியர் லீக் போட்டியின் மருத்துவ பங்குதாரராக காவேரி மருத்துவமனை இணைப்பு