தமிழ்நாட்டில் 24ம் தேதி வரை மழை நீடிக்கும் வாய்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் 24ம் தேதி வரை மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலைவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி தொடர்ந்து அதே இடத்தில் நீடித்து வருவதால், இன்றும் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதன் தொடர்ச்சியாக 22ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதே நிலை 24ம் தேதி வரை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வெப்பநிலை என்பது பொதுவாக இயல்பைஒட்டி இருக்கும். சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் மாலை இரவு நேரங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். தெற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகள், மற்றும் ஆந்திரக் கடலோரப் ப குதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிமீ வேகத்திலும், வீசும்.

Related posts

பாலாற்றின் குறுக்கே புதிய அணை கட்டும் முயற்சியை கைவிட வேண்டும்: ஆந்திர அரசுக்கு டிடிவி.தினகரன் வலியுறுத்தல்

ஆணவ குற்றங்களை தடுக்க சட்டம் இயற்றும்வரை உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துங்கள்: திருமாவளவன் வலியுறுத்தல்

பாமக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு