தமிழ்நாடு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை எதிரொலி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

தருமபுரி: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மீண்டு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு கர்நாடக அணைகளிலிருந்து சுமார் 8 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, ஒகேனக்கல், நாட்ராம்பாளையம், பிலிகுண்டுலு உள்ளிட்ட கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

இதனை தொடர்ந்து ஒகேனக்கல்லுக்கு நேற்று முன்தினம் 1,500 கன அடி தண்ணீர் மட்டுமே வந்த நிலையில் நேற்று காலை 6,500 கன அடியாக உயர்ந்தது. மேலும் 11 மணிக்கு 10,000 கன அடியாக உயர்ந்தது. நேற்று மாலை வரை அதே நீர்வரத்து தொடர்ந்த நிலையில் இன்று அதிகாலை வரை நீர்வரத்து குறைய தொடங்கியது.

இன்று காலை 7 மணிக்கு 8,000 கன அடியாக நீர்வரத்து குறைந்தது. மேலும் இன்று 10 மணியை பொறுத்தவரை மீண்டும் நீர்வரத்து 10 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. நேற்று பெய்த கனமழை காரணமாக நீர்வரத்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.

இந்நிலையில் கர்நாடக அணைகளில் திறந்துவிடப்பட்ட நீரின் அளவு கடுமையாக குறைக்கப்பட்டுள்ளது. 2,688 கன அடி நீர் மட்டுமே இன்று திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாளை முதல் நீர்வரத்து படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

நடப்பாண்டில் இயற்கை பேரிடர்களால் 1,492 பேர் பலி

இஸ்ரேலுக்கு பக்க பலமாக நிற்போம் என அமெரிக்கா சூளுரை … இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க தூதரகம் எச்சரிக்கை!!

மகாளய அமாவாசை : மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!!