தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

சென்னை: தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த 5 நாட்களுக்கு இயல்பான வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் பரவலாக தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவுகிறது.

இதில், சென்னை, நீலகிரி உட்பட ஒரு சில இடங்களில் மழை பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 7 செமீ மழை பதிவாகியுள்ளது. வெயிலைப் பொருத்தவரை, கடந்த சில தினங்களாக சற்றே குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகிறது. நேற்று சென்னையில் பரவலாக காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்தது. இந்த மழையானது அடுத்த 24 மணி நேரத்திற்கு தொடர்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக வெப்பச்சலன மழை என்றால், காற்றுடன் கூடிய இடி மின்னலுடன் கூடிய மழையாகத்தான் பொழியும். அந்த நிலை இன்றும் தொடர்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கான மழையுமே, பொதுவாக வெப்பச்சலன மழை எப்படி இருக்குமோ, அதே நிலையில்தான் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பச்சலன மழை என்பது, காலை, பகல் நேரங்களில் இருக்காது. மாலை மற்றும் இரவு நேரங்களில் காற்று, இடி மின்னலுடன் கூடிய மழையாக பெய்யக்கூடும்.

அந்த மழை 7 நாட்களுக்கு தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை; தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகளில் 55 கிமீ வரைக்குமான காற்று வீசுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேஒபோல் தென்மேற்கு வங்கக்கடலின் வடக்குப்பகுதி, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 55 முதல் 65 கிமீ வேகத்திற்கு காற்று வீசுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலை: 8 பேர் கைது: மாயாவதி கண்டனம்

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கண்டனம்