தமிழ்நாட்டில் 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

சென்னை: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில்; நாளை முதல் 8ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அத்துடன் இன்று தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தின் அடுத்த 3 மணி நேரத்திற்கு 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Related posts

செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் மதுவிலக்கு, போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி: செங்கல்பட்டு கலெக்டர் பங்கேற்பு

நெற்பயிரை நாசம் செய்யும் காட்டு பன்றிகள்: நடவடிக்கை எடுக்க விவசாயிகள் மனு

நாகல்கேணி பகுதியில் கஞ்சா விற்ற தம்பதி கைது