ரயில் நிலையம் அருகே சாலையில் மழைநீர் தேங்காமல் மாற்று ஏற்பாடு

திருத்தணி: தினகரன் செய்தி எதிரொலியால் திருத்தணி ரயில் நிலையம் அருகே உள்ள சாலையில் மழைநீர் தேங்காமல் அகற்ற மாற்று ஏற்பாடு செய்ய எஸ். சந்திரன் எம்.எல்.ஏ நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.  திருத்தணி ரயில் நிலையம் அருகில் மழைநீர் வடிகால்வாய் ரயில்வே நிர்வாகம் அடைத்து விட்டதால், கடந்த சில நாட்களாக மழைநீர் பெய்ததால் மா.பொ.சி. சாலையில் முழங்கால் அளவுக்கு தேங்கியது. இதனால், வாகன ஒட்டிகள் தத்தளித்த சம்பவம் தொடர்பாக தினகரன் நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியானது. இதனை தொடர்ந்து, ரயில் நிலையம் அருகில் பரபரப்பாக காணப்படும் மாபொசி சாலையில் மழைநீர் தேங்குவதை தடுக்க மாற்று ஏற்பாடுகள் குறித்து திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரன் நெடுஞ்சாலைத்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகளுடன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ரயில்வே நிர்வாகம் தண்டவாளம் பகுதியில் உள்ள மழைநீர் வடிகால்வாய் முற்றிலுமாக அடைத்து விட்டதால், சிறிய மழைக்கும் மாபொசி சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்பதால், வியாபாரிகள், வாகன ஓட்டிகள், பயணிகள் உட்பட அனைவரும் பெரும் பாதிப்படைந்து வருவதை தடுத்து தற்காலிகமாக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் ஒட்டி ரயில் நிலையம் முகப்பு பகுதிக்கு அருகில் உள்ள மற்றொரு மழைநீர் வடிகால்வாய் வரை பள்ளம் தோண்டி மழைநீர் அதில் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். நிரந்தர தீர்வுக்கு ஏதுவாக மாற்று பாதையில் மழைநீர் வடிகால்வாய் அமைக்க விரைவில் டெண்டர் கோரப்பட்டு பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.சந்திரன் எம்.எல்.ஏ தெரிவித்தார்.

Related posts

அண்ணா பல்கலைக்கு குண்டு மிரட்டல்

அமைச்சர் சேகர்பாபு தலைமையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை

தமிழ்நாடு பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு தீர்மானத்திற்கு ஒப்புதல் தர வேண்டும்: திமுக எம்.பி. ராஜேஷ்குமார் வலியுறுத்தல்