ரயில் நிலையத்தில் நடைமேடை சரிந்து விபத்து

மயிலாடுதுறை: மயிலாடுதுறை ரயில் நிலையத்தில், கட்டட பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் நடைமேடை சரிந்து விபத்துக்குள்ளானது. பயணிகள் யாரும் நடைமேடையில் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கபப்ட்டுள்ளது. அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மயிலாடுதுறை ரயில் நிலையம் மேம்படுத்தப்பட்டு வந்தது. நகரும் படிகட்டுகளுடன் கூடிய நடை மேம்பாலம் அமைப்பதற்காக, நடைமேடை அருகே பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. திடீரென பள்ளத்தில் நடைமேடை சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் பயணிகள் அமரும் இருக்கைகள், மின்கம்பம் சேதமாகியுள்ளது.

Related posts

சாம்சங் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு .!!

காரைக்காலில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்

புதுக்கோட்டை மாநகராட்சியின் முதல் மேயராக திலகவதி செந்தில் பதவியேற்பு