ரயில்வே திட்டங்கள் மூலம் தென்மாநிலங்கள் வளர்ச்சி அடைய தமிழ்நாட்டிற்கு அதிக நிதி ஒதுக்கீடு: வந்தேபாரத் ரயில்கள் தொடக்க விழாவில் பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: ரயில்வே திட்டங்கள் மூலம் தென்மாநிலங்கள் வளர்ச்சி அடைய தமிழ்நாடு, கர்நாடகாவிற்கு அதிக நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி நேற்று தெரிவித்தார். மீரட் -லக்னோ, மதுரை-பெங்களூரு மற்றும் சென்னை -நாகர்கோயில் இடையே இயங்கும் வகையில் 3 வந்தே பாரத் ரயில் சேவை யை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: 2027ம் ஆண்டு விக்சிக் பாரத் இலக்கை அடைவதற்கு தென் மாநிலங்களின் விரைவான வளர்ச்சி முக்கியமானது.

தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவுக்கு பட்ஜெட் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. ரயில் போக்குவரத்தை பலப்படுத்தும். இந்திய ரயில்வே வந்தே பாரத் ரயில்களின் நவீனமயமாக்கல் மற்றும் விரிவாக்கம் மூலம் நாடு விக்சித் பாரத் இலக்கை நோக்கி முன்னேறி வருகிறது.  நவீன ரயில் கட்டமைப்பு விக்சித் பாரத் தொலைநோக்குப் பார்வையின் வலுவான தூண். இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரயில்வேக்கு ரூ.2.5 லட்சம் கோடிக்கு மேல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய ரயில்வேயின் பழைய பிம்பத்தை மாற்றும் வகையில் உயர் தொழில்நுட்ப சேவைகளுடன் அரசு இணைத்து வருகிறது.

மேலும் விக்சித் பாரதத்தின் இலக்கை நிறைவேற்ற தென் மாநிலங்களின் விரைவான வளர்ச்சி இன்றியமையாதது. தென்னிந்தியா மகத்தான திறமைகள், வளங்கள் மற்றும் வாய்ப்புகளின் பூமி. ஒட்டுமொத்த தென்னிந்தியாவுடன் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஒன்றிய அரசு முன்னுரிமை அளிக்கும். ரயில்வேயின் வளர்ச்சிப் பயணம் அரசின் அர்ப்பணிப்புக்கு உதாரணம்.

2014ம் ஆண்டை விட இந்த ஆண்டு ரயில்வே பட்ெஜட்டில் தமிழ்நாட்டிற்கு ரூ.6,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல இந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் கர்நாடகாவுக்கு ரூ.7,000 கோடிக்கு மேல் ஒதுக்கப்பட்டது. இது 2014ம் ஆண்டை விட 9 மடங்கு அதிகமாகும். இந்த கூடுதல் நிதி ஒதுக்கீடுகள் மூலம் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களில் ரயில் போக்குவரத்தை மேலும் வலுப்படுத்தியது. அங்கு ரயில் பாதைகள் மேம்படுத்தப்பட்டு உள்ளன. தண்டவாளங்கள் மின்மயமாக்கப்பட்டு உள்ளன. ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கப்பட்டு வருகிறன்றன.

Related posts

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!