ரயில்வே பாரா மெடிக்கல் பணியில் 1376 இடங்கள்

ரயில்வே மருத்துவமனைகளில் காலியாக 1376 பாரா மெடிக்கல் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியிடங்கள் விவரம்:

i) Dietician: 5 இடங்கள். சம்பளம்: v44,900. வயது: 18 லிருந்து 36க்குள். தகுதி: ஏதாவது அறிவியல் பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் நீரழிவு பிரிவில் முதுகலை டிப்ளமோ தேர்ச்சி அல்லது ஹோம் சயின்ஸில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ii) Nursing Superintendent: 713 இடங்கள். சம்பளம்: ரூ.44,900. வயது: 20 லிருந்து 43க்குள் இருக்க வேண்டும். தகுதி: நர்சிங் பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
iii) Audiologist & Speech Therapist: 4 இடங்கள். சம்பளம்: ரூ.35,400. வயது: 21 லிருந்து 33க்குள் இருக்க வேண்டும். தகுதி: Audiology/Speech Language Pathology பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் ஆர்சிஐ யில் பதிவு செய்திருக்க வேண்டும்.
iv) Clinical Psychologist: 7 இடங்கள். சம்பளம்: ரூ.35,400. வயது: 18 லிருந்து 36க்குள். தகுதி: Clinical Psychology/Social Psychology பிரிவில் முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
v) Dental Hygienist: 3 இடங்கள். சம்பளம்: ரூ.35,400. வயது: 18 லிருந்து 36க்குள். தகுதி: உயிரியல் பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் Dental Hygiene படிப்பில் தேர்ச்சியும், 2 வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். மேலும் Dental Council of India வில் பதிவு செய்திருக்க வேண்டும்.
vi) Dialysis Technician: 20 இடங்கள். சம்பளம்: ரூ.35,400. வயது: 18 லிருந்து 36க்குள். தகுதி: 20 லிருந்து 36க்குள். தகுதி: ஹீமோடயாலிசிஸ் பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு/டிப்ளமோ தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
vii) Health & Malaria Inspector Grade III: 126 இடங்கள். சம்பளம்: ரூ.35,400. வயது: 18 லிருந்து 36க்குள். தகுதி: வேதியியல் பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் Health/ Sanitary Inspector படிப்பில் ஒரு வருட டிப்ளமோ தேர்ச்சி.
viii) Laboratory Superintendent: 27 இடங்கள். சம்பளம்: ரூ.35,400. வயது: 18 லிருந்து 36க்குள். தகுதி: Bio-chemistry /Microbiology/Life Science பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் DMLT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ix) Perfusionist: 2 இடங்கள். சம்பளம்: ரூ.35,400. வயது; 21 லிருந்து 43க்குள் இருக்க வேண்டும். தகுதி: ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் பெர்பியூஷன் டெக்னாலஜியில் டிப்ளமோ தேர்ச்சியும், 3 வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
x) Physio Therapist Grade II: 20 இடங்கள். வயது: 18 லிருந்து 36க்குள். சம்பளம்: ரூ.35,400. தகுதி: ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம்.
xi) Occupational Therapist: 2 இடங்கள். வயது: 18 லிருந்து 36க்குள். சம்பளம்: ரூ.35,400. தகுதி: அறிவியல் பாடத்தில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் Occupational Therapy ல் டிப்ளமோ தேர்ச்சி.
xii) Cath Laboratory Technician: 2 இடங்கள். சம்பளம்: ரூ.35,400. வயது; 18 லிருந்து 36க்குள். தகுதி: ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் கார்டியாக் லேப்பில் டிப்ளமோ தேர்ச்சி.
xiii) Pharmacist (Entry Grade): 246 இடங்கள். சம்பளம்: ரூ.29,200. வயது: 20 லிருந்து 38க்குள். தகுதி: அறிவியல் பாடத்தில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் டி.பார்ம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
xiv) Radiographer X Ray: 64 இடங்கள். சம்பளம்: ரூ.29,200. வயது: 19 லிருந்து 36க்குள். தகுதி: இயற்பியல்/ வேதியியல் பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் ரேடியோகிராபியில் டிப்ளமோ தேர்ச்சி.
xv) Speech Therapist: 1 இடம். சம்பளம்: ரூ.29,200. வயது: 18 லிருந்து 36க்குள். தகுதி: ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் ஆடியோ மற்றும் ஸ்பீச் தெரபியில் டிப்ளமோ தேர்ச்சியும் 2 வருட பணி அனுபவம்.
xvi) Cardiac Technician: 4 இடங்கள். சம்பளம்: ரூ.25,500. தகுதி: அறிவியல் பாடத்தில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் எக்கோ கார்டியோகிராபியில் டிப்ளமோ தேர்ச்சி.
xvii) Optometrist: 4 இடங்கள். சம்பளம்: ரூ.25,500. வயது: 18 லிருந்து 36க்குள். தகுதி: Optometry ல் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி/டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
xviii) ECG Technician: 13 இடங்கள். சம்பளம்: ரூ.25,500. தகுதி: அறிவியல் பாடத்தில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் ECG/Cardiology Technician/Cardiology Techniques பிரிவில் டிப்ளமோ/பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
xix) Labortatory Assistant Grade II: 94 இடங்கள். சம்பளம்: ரூ.21,700. வயது: 18 லிருந்து 36க்குள். தகுதி: அறிவியல் பாடத்தில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் DMLT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
xx) Field Worker: 19 இடங்கள். வயது: 19 இடங்கள். சம்பளம்: ரூ.19,900. வயது: 18 லிருந்து 33க்குள். தகுதி: அறிவியல் பாடத்தி்ல் பிளஸ் 2 தேர்ச்சி.

கட்டணம்: பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.500/-. எஸ்சி/எஸ்டி/முன்னாள் ராணுவத்தினர்/பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.250/-. இதை ஆன்லைனில் செலுத்தவும்.

அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும். விண்ணப்பதாரர்களுக்கு சிபிடி தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

www.rrbchennai.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.09.2024.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு