ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சதர்ன் ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கான 59 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

பணி: Sports Persons (Sports Quota- 2024-25). மொத்த இடங்கள்: 59.

விளையாட்டு பிரிவு வாரியாக காலியிடங்கள் விவரம்:

Athletics-7, Body Building-2, Table Tennis-2, Basket Ball-7, Weight Lifting-4, Chess-1, Boxing-8, Cricket-8, Football-1, Swimming-4, Volley ball-6, Power Lifting-2, Hockey-4, Waterpolo-3.
தகுதி: ஏதாவதொரு இளநிலைப் பட்டம் தேர்ச்சி அல்லது பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஏதாவதொரு டிரேடில் ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டும். இந்த கல்வித்தகுதியுடன், காலியிடம் ஏற்பட்டுள்ள விளையாட்டுப் பிரிவுகள் ஏதாவது ஒன்றில் தேசிய/மாநில/ பல்கலைக்கழக அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் விளையாடி குறைந்தது மூன்றாவது இடம் பெற்றிருக்க வேண்டும்.விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய விளையாட்டு தகுதிகள் பற்றிய கூடுதல் விவரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு: 01.01.2025 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 7வது ஊதியக்குழு விதிமுறைப்படி வழங்கப்படும்.
கட்டணம்: பொது மற்றும் பொருளாதார பிற்பட்டோர், ஒபிசியினருக்கு ரூ.500/-. எஸ்சி/எஸ்டி/பெண்கள்/சிறுபான்மையினருக்கான கட்டணம் ரூ.250/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு தேசிய அளவில் நடந்த 19 வயதிற்குட்பட்டவர்களுக்கான போட்டிகளில் பங்கேற்று குறைந்தபட்சம் மூன்றாம் இடம் பிடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். சம்பந்தப்பட்ட விளையாட்டில் 01.04.2022 தேதிக்கு பின்னர் விண்ணப்பதாரர் பெற்ற விளையாட்டு சாதனைகள் மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.விண்ணப்பதாரரின் விளையாட்டு தகுதி மற்றும் விளையாட்டு சாதனைகள் அடிப்படையில் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.

www.rrcmas.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 06.10.2024.

Related posts

அரியானா தேர்தல் பிரசாரம் இன்று முடிவடைகிறது: இறுதிகட்ட பிரசாரத்தில் கட்சிகள் மும்முரம்

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற உள்ள போர் விமான சாகச நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அமைச்சர் எ.வ.வேலு களஆய்வு மேற்கொண்டார்!

பார்வையாளர்களுக்கு பிரத்யேக ஏற்பாடுகள்; சிறையில் செந்தில் பாலாஜிக்கு சிறப்பு வசதிகள் தரப்படவில்லை: அமைச்சர் ரகுபதி பேட்டி