தண்டவாளத்தில் காஸ் சிலிண்டர் ரயிலை கவிழ்க்க சதியா?

ஹரித்துவார்: உத்தரகாண்ட் மாநிலம், ரூர்க்கி-லக்சார் ரயில் பாதை தடத்தில் நேற்று காலை 6.45 மணிக்கு சரக்கு ரயில் வந்து கொண்டிருந்தது. தண்டேரா ரயில் நிலையத்திற்கு அருகே உள்ள 2வது ரயில் பாதையில் காஸ்சிலிண்டர் கிடந்ததை சரக்கு ரயிலின் கார்டு பார்த்து ரயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து ரயில்வே போலீசார் விரைந்து சென்று காஸ் சிலிண்டரை அப்புறப்படுத்தினர். அது காலி சிலிண்டர். அந்த நேரத்தில் அந்த தடத்தில் ரயில் எதுவும் வரவில்லை என்பதால் அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை. ரயில் தண்டவாளத்தில் காஸ் சிலிண்டர் கண்டெடுக்கப்பட்டது ரயிலை கவிழ்க்க நடந்த சதியா என்பது குறித்தும் விசாரிக்கப்படுகிறது என போலீசார் தெரிவித்தனர்.

Related posts

கோவையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

மகாராஷ்டிராவில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்படுவதால் பரபரப்பு: வாகன சோதனையை தீவிரப்படுத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

தீபாவளி போனஸ் கேட்டு லெம்பலக்குடி சுங்கச்சாவடி ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம் : கட்டணமின்றி செல்லும் வாகனங்கள்