அமைந்தகரை, அண்ணாநகரில் கஞ்சா விற்பனை செய்து வந்த ரவுடிகள் உட்பட 5 பேர் கைது

அண்ணாநகர்: சென்னை அமைந்தகரை பகுதியில் கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்துவருவதாக கிடைத்த தகவல்படி, அமைந்தகரை இன்ஸ்பெக்டர் கிருபாநிதி தலைமையில் போலீசார் மாறுவேடத்தில் கண்காணித்து வந்தனர். அமைந்தகரை சுப்பிரமணியன் தெருவில் 3 பேர் கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்துவந்த 3 பேர், போலீசார் ரோந்து வாகனத்தை பார்த்ததும் கஞ்சா பொட்டலங்களை கீழே போட்டுவிட்டு தப்பிக்க முயன்றனர்.

ஆனால் போலீசார் விரட்டி சென்று அவர்களைசுற்றிவளைத்து மடக்கிபிடித்து கைது செய்து நடத்திய விசாரணையில், சென்னை பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி வினோத்ராஜா(எ) சென்ட்ரல் ராஜா(37) என்பதும் சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ஸ்டீபன்(எ) விநாயகமூர்த்தி (24) என்பதும் எண்ணூர் பகுதியை சேர்ந்தவர் கஞ்சா வியாபாரி நரேஷ்குமார்(27) ஆகிய 3 பேரும் சேர்ந்து ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கிவந்து அமைந்தகரை சுற்றுவட்டார பகுதியில் விற்பனை செய்துவந்ததும் தெரியவந்தது. இவர்களிடம் இருந்து 4 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இதுபோல் அண்ணாநகர் பகுதியில் இன்ஸ்பெக்டர் கோபாலகுரு தலைமையில் போலீசார் நடத்திய சோதனையில் கஞ்சா விற்பனை செய்த சென்னை அருகே மதுரவாயல் பகுதியை சேர்ந்த நாகூர்அமீன்(23), இவரது கூட்டாளி கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரிஷி(24) ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து விற்பனை செய்தது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து இரண்டு பேரையும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related posts

பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி அரசு ஊழியர்கள் போராட்டம்

செம்பரம்பாக்கம் ஏரியில் ஆண் சடலம் மீட்பு

வீட்டில் இருந்து திருடிய ஏடிஎம் கார்டு மூலம் ரூ.70 ஆயிரம் அபேஸ்