வீட்டில் சோதனை நடத்திய போது ஒரே இடத்தில் மணிக்கணக்கில் நிற்க வைத்து கொடுமை: ‘ஈடி’ அதிகாரிகள் மீது காங். எம்எல்ஏ புகார்

ராஞ்சி: அமலாக்கத்துறை அதிகாரிகள் தனது வீட்டில் சோதனை நடத்திய போது ஒரே இடத்தில் மணிக்கணக்கில் நிற்க வைத்து கொடுமைபடுத்தியதாக காங்கிரஸ் எம்எல்ஏ புகார் தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் வசிக்கும் பர்ககான் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ அம்பா பிரசாத்தின் வீடு மற்றும் மாநிலத்தின் பிற இடங்களில் நேற்று அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதுகுறித்து எம்எல்ஏ அம்பா பிரசாத் கூறுகையில், ‘அமலாக்கத்துறையினர் எனது வீட்டில் சோதனை நடத்திய போது, என்னை ஒரே இடத்தில் மணிக்கணக்கில் நிற்க வைத்து கொடுமைபடுத்தினர்.

கிட்டத்தட்ட 18 மணி நேரம் சோதனை நடத்தினர். ஹசாரிபாக் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட எனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. நான் அவர்களது கோரிக்கையை புறக்கணித்தேன். பர்ககான் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றேன். நாங்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் என்பதால் குறிவைக்கப்படுகிறோம்’ என்றார். முன்னதாக நிலம் மற்றும் இடமாற்ற முறைகேடு வழக்கில் காங்கிரஸ் எம்எல்ஏ அம்பா பிரசாத் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

Related posts

கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்