ராகுல் காந்தி யாத்திரை மும்பையில் நாளை நிறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட தலைவர்கள் பங்கேற்பு

மும்பை: ராகுல்காந்தியின் நீதியாத்திரை மும்பையில் நாளை நிறைவடைகிறது. இதில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்கிறார்கள். மணிப்பூர் முதல் மகாராஷ்டிரா வரை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஜன.14ம் தேதி பேருந்து மூலம் நீதி யாத்திரை தொடங்குகிறார். பஸ் மூலம் பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி சுமார் 6200 கி.மீ. தூரம் கடந்து மும்பையில் நாளை யாத்திரையை நிறைவு செய்கிறார். மும்பை தாதர் சிவாஜி பூங்காவில் நடக்கும் நிறைவு விழாவில் இந்தியா கூட்டணி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், பீகார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், உபி முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, என்சிபி (சரத்சந்திர பவார்) தலைவர் சரத் பவார் உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் அனைவரும் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

மருதாநதி, குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் 339 ரன்களை குவித்தது இந்தியா