மனைவியை எதிர்த்து போட்டி ராகுல் வேறு தொகுதியில் போட்டியிட வேண்டும்: டி.ராஜா கருத்து

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின்முதல் பட்டியலில் வயநாடு தொகுதியில் இருந்து காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி மீண்டும் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த தொகுதியில் இடது ஜனநாயக முன்னனி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் பொது செயலாளரான டிராஜாவின் மனைவி ஆனி ராஜா நிறுத்தப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் பொது செயலாளர் டி ராஜா கூறுகையில், ‘‘இடது ஜனநாயக முன்னணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் வயநாடும் ஒன்று. எனவே எங்களது வேட்பாளரை அறிவித்தோம். ராகுல்காந்தி ஒரு மாநில தலைவர் கிடையாது. அவர் தேசிய தலைவர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர். ராகுல்காந்தியின் சிறப்புக்கு அவர் வேறு எந்த தொகுதியில் இருந்தும் நேரடியாக பாஜவை எதிர்கொண்டிருக்க வேண்டும்”என்று குறிப்பிட்டார்.

Related posts

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!

MSME தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்