அமெரிக்க தொழில் அதிபர் சோரசுடன் இணைந்து மோடி அரசை கவிழ்க்க ராகுல் சதித்திட்டம்: ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி குற்றச்சாட்டு

புதுடெல்லி: அமெரிக்க தொழில் அதிபர் சோரசுடன் இணைந்து மோடி அரசை கவிழ்க்க ராகுல்காந்தி சதி செய்வதாக ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி குற்றம் சாட்டி உள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மீது குற்றம் சாட்டி வீடியோ பதிவிட்ட பா.ஜ தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாளவியா மீது கர்நாடகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுபற்றி ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி நேற்று அளித்த பேட்டி:

ராகுல் காந்தியின் அமெரிக்கப் பயணம் தொடர்பாக பாஜ எடுத்த நிலைப்பாட்டிற்கு எதிராக கர்நாடகாவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ராகுல்காந்தி அமெரிக்கா சென்ற போது இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை சீர்குலைக்க விரும்பும் பிரபல தொழில் அதிபர் ஜார்ஜ் சோரசுக்கு நெருக்கமானவர்களுடன் இணைந்து அவர் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். வட அமெரிக்காவின் இஸ்லாமிய அமைப்பை சேர்ந்த தன்சீம் அன்சாரி என்பவர் ராகுல்காந்தியின் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தார். அன்சாரிக்கு ஜமாத்-இ-இஸ்லாமி என்ற இஸ்லாமிய அமைப்புடன் தொடர்பு உள்ளது. மேலும் ராகுல் காந்தியின் அமெரிக்க பயணத்தின் போது சுனிதா விஸ்வநாத்தை சந்தித்தது உண்மையா என்பது பற்றி காங்கிரசார் இன்னும் பதில் அளிக்கவில்லை.

ஏனெனில் தொழில் அதிபர் ஜார்ஜ் சோரஸ் என்aன செய்ய விரும்புகிறார் என்பது ஒவ்வொரு இந்தியருக்கும் தெரிந்திருக்கும் போது, ​​ராகுல் காந்தி ஏன் ஜார்ஜ் சோரஸால் நிதியுதவி பெற்றவர்களுடன் பழகுகிறார்? இது சோரஸ் மட்டும் அல்ல என்பதும் தெளிவாகிறது. கர்நாடகாவில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் கூட ஜார்ஜ் சோரசிடம் நிதியுதவி பெற்ற ஓபன் சொசைட்டி அறக்கட்டளையின் துணைத்தலைவர் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்