மோடி பெயர் சர்ச்சை: ராகுல் ஏப். 25ல் ஆஜராக நீதிமன்றம் சம்மன்

பாட்னா: மோடி பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்தி ஏப்ரல் 25ம் தேதி ஆஜராக பாட்னா நீதிமன்றம் உத்தரவிட்டது. மோடி பெயர் குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் மீது பீகார் முன்னாள் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி பாட்னா நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கை கடந்த 18ம் தேதி விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஆடி தேவ், ராகுல் காந்தி நேற்று (ஏப். 12) நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, ஆஜரான ராகுல் தரப்பு வக்கீல், சூரத் நீதிமன்ற வழக்கில் தொடர்பான பணிகள் இருப்பதால் இன்று அவர் ஆஜராகவில்லை.

வழக்கை மற்றொரு தேதிக்கு ஒத்தி வைக்கும்படி கேட்டுக்கொண்டார். இதையடுத்து, வழக்கு விசாரணையை வரும் 25ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் ராகுல் காந்தி நேரில் ஆஜராவதை உறுதி செய்யும்படி அறிவுறுத்தினார். இதே போல் மோடி குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் மீது தொடரப்பட்ட வழக்கில் சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததால், அவரது எம்பி பதவி பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

சேலம் மாநகராட்சி முன்னாள் மண்டலக்குழு தலைவர் வெட்டிக்கொலை: தொழில் போட்டியா அல்லது முன்பகை காரணமாக என போலீஸ் விசாரணை

தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவரை ஏன் பணி நீக்கம் செய்யவில்லை? ஐகோர்ட் கேள்வி

சாமியார் போலே பாபா மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு.. ஜென் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கிலும் தொடர்பு