எம்பி பதவி பறிக்கப்பட்ட பிறகு முதன்முறையாக ராகுல், பிரியங்கா காந்தி இன்று வயநாடு வருகை: பிரமாண்ட பேரணிக்கு காங். ஏற்பாடு

திருவனந்தபுரம்: எம்பி பதவியில் இருந்து தகுதீ நீக்கம் செய்யப்பட்ட பிறகு முதன்முறையாக ராகுல் தொகுதி மக்களை சந்திக்க சகோதரி பிரியங்காவுடன் இன்று வயநாடு வருகிறார்.
பிரதமர் மோடி குறித்து அவதூறு பேசியதாக தொடரபட்ட வழக்கில் ராகுல்காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பு வந்த உடனேயே எம்பி பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து வயநாட்டில் உள்ள அவரது எம்பி அலுவலகத்தின் டெலிபோன் மற்றும் இன்டர்நெட் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
இந்தநிலையில் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக ராகுல்காந்தி இன்று அவரது சொந்த தொகுதியான கேரள மாநிலம் வயநாட்டுக்கு வருகிறார். அப்போது தொகுதி மக்களை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ராகுல் காந்தியுடன் அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் வருகிறார். காலையில் விமானத்தில் கோழிக்கோடு வரும் ராகுல்காந்தி, அங்கிருந்து கார் மூலம் வயநாட்டுக்கு செல்கிறார். அதைத்தொடர்ந்து மாலையில் வயநாடு மாவட்டம் கல்பெட்டாவில் தொண்டர்கள் புடைசூழ பிரமாண்ட பேரணியை நடத்தவும் காங்கிரஸ் கட்சி சார்பில் தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

  • உண்மையிலிருந்து பின்வாங்கமாட்டார்: பிரியங்கா பெருமிதம்
    உலக உடன்பிறப்புகள் தினம் வருடம் தோறும் ஏப்ரல் மாதம் 10 ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் அனைவரும் தங்களது உடன்பிறந்த சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்துக்களை பரிமாறி கொள்வர். இந்நிலையில் காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி அவரது சகோதரர் ராகுல் காந்தியுடன் இருக்கும் புகைப்படத்தை உடன்பிறப்புகள் தினமான நேற்று இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவரது பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அதில், அநியாயத்தை கண்ணியத்துடன் எதிர்கொள்ளும், அனைத்து வகையான அசுத்தங்களும் தன் மீது வீசப்பட்டாலும், நன்மைக்காகவும் கருணைக்காகவும் நிற்கும் தைரியம் கொண்ட எனது ஒரே உடன்பிறந்த சகோதரா. நான் உன்னைப் பற்றி பெருமைப்படுகிறேன். எவ்வளவு பேர் அவரை விட்டு ஓடிப் போனாலும், முதுகுக்குபின் கத்தியை திருப்பினாலும், அதிகாரத்தை பயன்படுத்தி அமைதிப்படுத்த நினைத்தாலும் உண்மை நிலையில் இருந்து என்றுமே அவர் பின்வாங்க மாட்டார் என்று அவரை பற்றி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

Related posts

தமிழ்நாட்டின் வரலாற்றில் இன்று மகிழ்ச்சி மிக்க நாள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

பெரியகுளம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு சீல்

பூவிருந்தவல்லி அருகே மின்கம்பி பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து