நிதிஷ்குமார் பாஜக பக்கம் சாய்ந்துள்ள நிலையில் ராகுல் பீகாரில் பயணம்: கிஷன்கஞ்ச் மக்களவை தொகுதியில் இருந்து யாத்திரையை தொடங்கினார்!!

பாட்னா : ராகுல் காந்தியின் மணிப்பூர் முதல் மும்பை வரையிலான ஒற்றுமை நீதி பயணம் பீகார் மாநிலத்தை எட்டியுள்ளது. அனைவருக்கும் நீதி என்ற செய்தியுடன் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி பாரத ஒற்றுமை நீதி யாத்திரை மேற்கொண்டுள்ளார். ஜனவரி 14ம் தேதி பயணத்தை தொடங்கிய ராகுல் காந்தி, வரும் மார்ச் 20ம் தேதி தனது பயணத்தை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளார். அசாம் மாநிலத்தை தொடர்ந்து மேற்கு வங்கத்தில் அவர் பயணம் மேற்கொண்ட நிலையில், அவரது பயணம் அரசியல் பரபரப்பு மிக்க பீகார் மாநிலத்தை தொட்டுள்ளது. பீகாரில் காங்கிரஸ் ஆதிக்கம் அதிகம் உள்ள கிஷன் கஞ்ச் மக்களவை தொகுதியில் இருந்து ராகுல் தனது பயணத்தை தொடர்ந்தார்.

எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி பாரதிய ஜனதாவுடன் கைகோர்த்து நேற்று பீகார் முதல்வராக 9வது முறையாக நிதிஷ் குமார் பதவியேற்று இருக்கும் நிலையில், அம்மாநிலத்தில் நேற்று ராகுல் காந்தி பயணம் மேற்கொண்டுள்ளார். நாளை பூர்ணியா மாவட்டத்திலும் நாளை மறுநாள் கார்திகார் மாவட்டத்திலும் அவர் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இவை ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் வலுவான மாவட்டங்கள் என்பதால் பீகாரில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. ராகுல் மேற்கு வங்கத்தில் பயணித்த போது. இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்த ஜேடியு கட்சி, அவரது பயணம் பீகாரை தொடும் போது, பாஜக பக்கம் சாய்ந்துவிட்டது. இந்த பரபரப்பான அரசியல் சூழலில் பீகாரில் ராகுல் காந்தியின் பயணம் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரிவாளால் வெட்டி படுகொலை!

உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது