r20 கோடியில் கூடுதல் கட்டிடம் குறைதீர் கூட்டம் பொதுமக்களிடமிருந்து 316 மனுக்கள் குவிந்தது

திருவாரூர், செப். 26: திருவாரூரில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து 316 மனுக்களை கலெக்டர் சாரு பெற்றுகொண்டார். திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சாரு தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய ரேஷன் கார்டு, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 316 மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர்.

பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சாரு, அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, பொதுமக்களின் கோரிக்கைகள் தொடர்பாக குறித்த காலத்துக்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன், வருவாய் கோட்டாட்சியர்கள் சங்கீதா, கீர்த்தனாமணி, மாவட்ட வழங்கல் அலுவலர் கயல்விழி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் புவனா, சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் லதா உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி